கனவொன்று எனக்கு வந்தது.
கண்டேன் அன்று ஒரு தேவதையை
வசீகரமாய் வானதூதர் என்னைப் பார்க்க
வேண்டியதை கேள் என்று என்னை கேட்க
என் நெஞ்சை திறந்தேன் நினைவுகளை விரித்தேன்.
கேட்டேன் நான் அன்று
காட்டு மலர்களை போன்ற
கவலையற்ற வாழ்வை
வீட்டில் விளையாட்டும், சிரிப்பும்
நிறைந்த இளமை பருவத்தை
தோள்கொடுத்து உதவி மகிழும்
நண்பர் கூட்டத்தை மற்றும்
என்றும் இறைவனை மறவா இதயத்தை கேட்டேன்.
அந்த அழகிய தூதர் அனைத்தும் தந்தேன்
அன்பே என்றார்.
அதனால் வந்தேன், கேட்டதை சொன்னேன்
நான் இன்று.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment