Friday, September 19, 2008

Sunday, September 14, 2008

Wednesday, September 10, 2008

Sunday, September 07, 2008

இவனுக்கு மட்டும் கேட்கவில்லை

வெளிநாட்டு பணம் வந்து
இளையோரின் கரம் விழுந்து
வீதியில் சிதறி விழ
ஏறியது விலைவாசீ
அதனால் ஏழை பரம ஏழையானான்

அறையெல்லாம் குளிர் காற்று
தரையெல்லாம் பளிங்கு கற்கள்
சுவரெல்லாம் காட்சி பொருட்கள்
தரையிறங்கினால் நகரக் கூட படகுக்கார்
செல்வர் வெளியே சென்றார்
இருக்கும் பணத்தில் இன்னமும் நிலம் வாங்க
புதிய புறாக்கூண்டு வீடுகள் கட்ட

பரம ஏழைக்கு ஒண்ட இடமில்லை
வாடகைக்கு வீடு என்றால்
வீட்டுகாரர் பல்லாயிரம் ஓர் மாதம் என்றார்
வாடகை கொடுத்து விட்டு
உணவை குறைத்து , உடையை தைத்து
பிள்ளையின் வயிறு நிறைத்து
தன் வயிற்றை காயவைத்து
பரம ஏழை நோயாளியானான்

"வாழ்க ஜனநாயகம்
வாழ்க சுதந்திரம்
வாழ்க தமிழர் கலாச்சாரம்"

என உரக்க பேசும் தமிழ்ப் பேச்சு
இவனுக்கு மட்டும் கேட்கவில்லை

Saturday, September 06, 2008